வவுனியாவில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

2596

கொரோனா..

இன்று வட மாகாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று வடமாகாணத்தில் 643 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், 15பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 07 பேரும், வவுனியா மாவட்டத்தில் 07 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவும் ஆபத்து இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.