வவுனியாவில் 16 உயிர்களை காவு வாங்கிய புகையிரத விபத்து!!

5037

கடுகதிப் புகையிரதத்தில்..

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதிப் புகையிரதத்தில் மோதி 16 எருமை மாடுகள் ப.லியாகியுள்ளன. இன்று (22.04.2021) காலை 6.20 மணியளவில் ஓமந்தைப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதிப் புகையிரதம் வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மேய்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியுள்ளது. இதன் காரணமாக 16 எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே ப.லியாகியுள்ளன.

இதேவேளை, வவுனியாவில் கால்நடைகளுக்கான மேய்சல் தரை இன்மையால் கால்நடைகள் வீதியோரங்கள், புகையிரதப் பாதை ஓரங்களில் மேய்சலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா திருநாவற்குளத்தில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்..

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் புகையரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று (22.04.2021) காலை 6.50 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் கடக்க முற்பட்டுள்ளார்.

இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளதுடன் சாரதி படுகாயடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத 40வயதுடைய நிசாகரன் என்ற ஆசிரியரே படுகாயமடைந்தவராவார். விபத்து தொடர்பான மேலதிக வி.சாரணைகளை புகையிர நிலைய அதிகாரிகளுடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த பாதுகாப்பற்ற கடவையில் டிஜிட்டல் தொழிநுட்ப ஒலி சமிச்சை அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தரை பணியில் ஈடுபடுத்துமாறு அப்பகுதி மக்கள் பல தடவைகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.