20 ஓவர் உலகக் கிண்ண தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான், ஏகான் கலைநிகழ்ச்சி!!

1178

Rahman20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டி வரும் 16ம் திகதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இதன் தொடக்கவிழாவில் இரண்டு ஒஸ்கார் விருதுகளை வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் புகழ்பெற்ற ராப் பாடகர் ஏகான் கலந்து கொண்டு மாபெரும் இசை நிகழ்ச்சியினை நடத்தவுள்ளனர்.

இந்நிகழ்ச்சி வங்கதேச பங்கபந்து மைதானத்தில் தொடங்குகிறது. இதுதொடர்பாக ரகுமானை சந்தித்து பேசிய வங்கதேச பிரதமர் ஷைக்கா ஹசீனா, ஏ.ஆர்.ரகுமானை சந்தித்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் பங்குபெறுவதன் மூலம் இப்போட்டிக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.