வவுனியா ஆலங்களில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்ட சித்ரா பௌர்ணமி விரதம்!!

1394

சித்ரா பௌர்ணமி…

சித்திரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பௌர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது.

மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்) சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.

சிறப்புப் பொருந்திய இத் திருநாள் இன்றாகும். இந் நாளில் தாயை இழந்தவர்கள் தனது தாயாரிற்கு பிதிர் தர்பணம் செய்வது சிறப்பாகும். சித்ரா பௌர்ணமி விரதம் இருந்தால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும்.

அந்த வகையில் வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களில் சித்திரா பௌர்ணமி விரதம் இந்துக்களால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

குறிப்பாக வவுனியாஇ குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆலய பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் கருமாரி அம்மனுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் தாயாரை இழந்தவர்கள் பிதிர் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

அத்துடன் சித்ரா கஞ்சியும் வழங்கப்பட்டது. இதன்போது தாயாரை இழந்த பலரும் தமது தாய்காக விரதம் அனுஸ்டித்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.