இலங்கைக்குள் பரவும் கொரோனா வைரஸால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்து!!

943

கோவிட்-19 வைரஸ்..

இலங்கைக்குள் பரவி வரும் கோவிட்-19 வைரஸ் கர்ப்பிணி தாய்மார்களை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என மகப்பேறு மற்றும் நரம்பியல் விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் மயூரமான தேவோலகே தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் பரவி வரும் கோவிட் 19 வைரஸ், கர்ப்பிணி தாய்மாரிகள் நுரையீரலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது அதிகரித்திருப்பதை காணக் கூடியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கர்ப்பிணி தாய்மாருக்கே நோய் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகளவில் தென்படுகிறது. இவ்வாறான நோய் அறிகுறிகளுடன் கூடிய மூன்று கர்ப்பிணி தாய்மார் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கர்ப்பிணி தாய்மார் கோவிட் 19 வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் நோய் அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக தம்மை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வது முக்கியமானது எனவும் மயூராமன தேவோலகே மேலும் தெரிவித்துள்ளார்.