மணமகனுக்கு கொரோனா : வித்தியாசமாக திருமணம் செய்துகொண்ட ஜோடி!!

1115

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேசத்தில் மணமகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், மணமக்களின் திருமணம் வித்தியாசமாக நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் உள்ள ரட்லம் நகரத்தில் நேற்று ஒரு ஜோடி PPE Kit எனும் மருத்துவ பாதுகாப்பு உடையணிந்து வித்தியாசமாக திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்கு முன்பு ஏப்ரல் 19-ஆம் திகதி மணமகனுக்கு கொரோனா இருப்பது தெரியந்ததது. இருப்பினும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்தியுள்ளனர்.

முதலில் அதிகாரிகள் திருமணத்தை நிறுத்த வந்துள்ளனர். ஆனால், மூத்த அதிகாரிகளின் வேண்டுகோள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில் ஒருவழியாகே திருமணம் நடைபெற்றது.

எளிதாக வீட்டிலேயே நடந்த இந்த திருமண விழாவில் மணமக்களுடன் 2 உறவினர்கள் மற்றும் புரோகிதர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் அனைவருமே PPE உடைகளையே அணிந்திருந்தனர்.

இந்த நிகழ்வு எந்த பெருந்தொற்றும் இரு மனங்கள் ஒன்று சேர்வதை தடுக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது. இந்த திருமண விழாவில் எடுக்கப்பட்ட சிறிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. மேலும், மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.