க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பேச்சுப் பரீட்சை இணைக்கப்படும் : கல்வி அமைச்சர்!!

285

bandula_gunawardena

அடுத்த வருடம் அமுலாகும் வகையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் ஆங்கில மொழிப் பரீட்சையில் கேட்டல் மற்றும் பேசும் ஆற்றல்களுக்கு 20 புள்ளிகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இதற்கான அனுமதியை அமைச்சரவையிடம் கோரியுள்ளார். அமைச்சரின் யோசனைப்படி அந்த பரீட்சை புறம்பான ஒன்றாக நடத்தப்படும்.

இதேவேளை அடுத்த வருடம் முதல் உள்ளூரில் இயங்கும் சர்வதேச பாடசாலைகளில் சமயம், வரலாறு மற்றும் தாய்மொழி போன்ற பாடங்களை கட்டாயப்படுத்தும் யோசனையும் அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.