மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய முன்னாள் மாநகரசபை உறுப்பினர் உயிரிழப்பு!!

712

batti

மட்டக்களப்பில் அமெரிக்காவுக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் பங்குகொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அருமைலிங்கம் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முன்னாள் ஈ.பி.டி.பி.உறுப்பினரும் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினராகவும் இருந்துவருவதுடன், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

நேற்று மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

காலை 8.30மணி தொடக்கம் பிற்பகல் 12.00மணி வரை இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீடு சென்ற அருமைலிங்கம் திடிரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.