பிரித்தானியாவை போன்று இலங்கையில் பாரிய நெருக்கடி ஏற்படும் அபாயம்!!

1047

பரவும் கோவிட்..

நாட்டில் பரவும் கோவிட் மரபணு முன்னரை விடவும் ஆபத்தானது என்பதனால் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றுவது கட்டாயமாகும். அவ்வாறில்லை என்றால் நிலைமை மோசமடையும் என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போது வேகமாக பரவும் வைரஸ், கடந்த காலகளில் பிரித்தானியாவில் பரவி பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியதென உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருநாகல் பிரதேசங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட பீசீஆர் மாதிரிகளின் பின்னர் இந்த விடயம் உறுதி செய்யப்பபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் முதலாவது, இரண்டாவது அலையை விடவும் அபாயமானதெனவும், அந்த மரபணு இலங்கை முழுவதும் ஏப்ரல் மாதத்தில் பரவியுள்ளது. இவ்வாறு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய மரபணு மற்றும் இதற்கு முன்னர் பரவிய மரபணுவின் அறிகுறிகளுடன் தொடர்புடையதாகும்.

இதற்கு முன்னர் நோய் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினை காணப்பட்டது, புதிய மரபணுவில் உடல் வலி, தலைவலி, வாசனை தெரியாமை போன்ற விடயங்கள் காணப்படும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இந்த புதிய மரபணு காரணமாக ஏற்படும் மரணங்கள் 55 வீதம் அதிகம் எனவும் மக்களுக்கு இடையில் 50 வீதம் அதிகமாக பரவும் எனவும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மாறுபாடு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதலில் ஏற்பட்டது. இது பரவினால் உயிரிழந்து விடுவோம் என்ற எண்ணமே எல்லோரிடமும் காணப்பட்டது. அது பரவியவுடன் சுகாதார பிரிவுகளிடம் தெளிவுப்படுத்தினோம்.

எனினும் 8 பேரிடம் மாத்திரம் காணப்பட்ட அந்த மரபணு மாறிய கொரோனா எல்லோரிடமும் எப்படி பரவியது என்பது தெரியவில்லை. எனினும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதென ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.

– தமிழ்வின்-