கொரோனா வைரஸ் காரணமாக ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரும் இலங்கை!!

1231

கொரோனா..

இலங்கையில் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையின் தாக்கம் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இன்றைய நாளின் மாலை ஐந்து மணி வரையிலான காலப்பகுதியில் 1,077 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் 1451 தொற்றாளர்களும் நேற்று முன்தினம் 1111 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர் அடையாளம் காணப்பட்டால் அது பெரும் ஆபத்தாக மாறும் சுகாதார அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்க நாளுக்கு அதிகரித்து வருகின்றமை குறித்து பெரும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஆபத்தான நிலையை உணர்ந்து நாட்டு மக்கள் உரிய சுகாதார விதிமுறைகளை முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.