தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவு 30,000 கோடிக்கு மேல்!!

304

ind

பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் செலவு தொகை 40 லட்சமாக தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. ஆனால் வேட்பாளர்களுக்காக கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வது பொதுக் கூட்டம், ஆட்களை திரட்டுவது கொடி, தோரணங்கள் கட்டுவது, வாகனங்களில் பிரசாரம் என பலவழிகளில் செலவு செய்கிறார்கள்.

வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகையும், கட்சிகள் பிரசாரம் செய்யும் தொகையும் தனித்தனியாக கணக்கிடப்படுகிறது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்பு பிரசார செலவு தொகை கட்சிகள் கணக்கிலும், வேட்பு மனுதாக்கல் செய்ததும் பிரசார செலவுகள் வேட்பாளர்கள் கணக்கிலும் சேர்த்துக் கொள்ளப்படும். இதனால் தான் வேட்பு மனுதாக்கலுக்கு முன்பே அரசியல் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள்.

இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் கட்சிகளின் பிரசார செலவு 30 ஆயிரம் கோடியை எட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் 15 ஆயிரம் கோடி அளவுக்கு அரசியல் கட்சிகள் செலவு செய்ததாகவும் தற்போது அது இரு மடங்கு உயர்ந்து 30 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதுவரை நடந்த தேர்தல்களிலேயே தற்போதுதான் அதிக அளவில் பண நடமாட்டம் இருப்பதாகவும் கணக்கில் காட்டப்படாத செலவு தொகையில் உள்நாட்டில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அது சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.