இயக்குனர் கே.வி.ஆனந்த் மரணம் : உடனடியாக மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்ட உடல்!!

1087


கே.வி.ஆனந்த் ..


பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாமல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு காரணமாக பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் உயிரிழந்தார்.இந்நிலையில், இவர் கடந்த 24-ஆம் திகதி கொரோனா தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது போன்ற நிலையில், தான் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கே.வி. ஆனந்த் மரணமடைந்தார்.


கொரோனா சிகிச்சையில் இருக்கும் போதே அவர் இறக்கும் போது, அவர் மரணத்திற்கு பிறகு மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். அப்போதும் அவருக்கு தொற்று உறுதியானால் அதன் பின்னரே கொரோனா மரணமாக அது மருத்துவமனை நிர்வாகத்தால் அறிவிக்கப்படும்.


பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கபடாது என்று தகவல் வெளியானது. இதையடுத்து தற்போது, அவரின் உடல், பெசன்ட் நகர் மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்காமல் தகனம் செய்யப்பட்டுள்ளது.