15 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய 18 வயது காதலன் கைது!!

784

Abuseசிலாபத்தில் 15 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 18 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம், கரவிடாகாரய – விரகுள தோட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி சிறுமி அவரது பெற்றோருக்கு தெரியாது இளைஞனால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இருவரும் கெட்டிப்பொல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர். பின்னதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞனுடன் காதல் தொடர்பு இருந்ததாகவும், அவரது வேண்டுகோளின்படி தான் வீட்டை விட்டு சென்றதாகவும் சிறுமி பொலிஸில் தெரிவித்துள்ளார்.

சிறுமி சிலாபம் வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.