ஊரடங்குச் சட்டம் குறித்து போலி செய்திகள் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணைகள்!!

933

போலி செய்திகள்..

நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக போலி செய்தி வெளியிட்டமை குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யூடியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஊரடங்குச் சட்டம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 17ம் திகதி வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போலி செய்தி வெளியிடப்பட்ட விவகாரம் குறித்து குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான போலிச் செய்திகள் வெளியிடப்படுவதனால் மக்கள் பதற்றமடையக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொவிட் நோய்த் தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக நாட்டின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

எனினும் நாடு தழுவிய ரீதியில் முடக்க நிலைமை அறிவிக்கப்படாது என இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.