வவுனியா நெடுங்கேணியில் கொரோனா தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

512


நெடுங்கேணியில்..


நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா வடக்கில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா வடக்கு பிரதேச சபை பதில் கடமை செயலாளர் இ.தயாபரன் தலைமையின் கீழ் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான நெடுங்கேணி சந்தை, பேரூந்து தரிப்பிடம், வங்கிகள், நகர வர்த்தக நிலையங்கள், வாடிகான்கள் என்பன தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.


குறித்த பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களின் உட்பகுதி மற்றும் நடைபாதைகள் போன்றவற்றிற்கு வவுனியா வடக்கு பிரதேச சபையினால் தொற்று நீக்கி மருந்து வீசப்பட்டது.