வவுனியாவில் மேலும் இரு தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!!

2213


கொரோனா தொற்று..


வவுனியாவில் மேலும் இரு தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  வவுனியா வைத்தியசாலை அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு நேற்று (01.05) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து குறித்த ஊழியருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், குறித்த தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றியவர்களிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


அதன் முடிவுகள் இன்று(02.05.2021) இரவு வெளியாகிய நிலையில் அதில் மேலும் இரு தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டது.


குறித்த தொற்றாளர்களை கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.