வவுனியாவில் நோயாளர் காவு வண்டி சாரதிக்கு கொரோனா தொற்று!!

1825


கொரோனா..


வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள நோயாளர் காவு வண்டி சாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் எழுமாறாக பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் முடிவுகள் சில இன்று (02.05) இரவு வெளியாகிய நிலையில் பிராந்திய சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


குறித்த சாரதியை கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.