வவுனியாவில் உணவகங்களில் விசேட மேற்பார்வை நடவடிக்கை!!

990


உணவகங்களில்..


வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் விசேட மேற்பார்வை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்று பரவலடைந்து வரும் நிலையில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.நகரில் அமைந்துள்ள உணவகங்களிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்களால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் வவுனியா உணவகங்களில் கடைப்பிடிக்கப்பட்டுவரும், சுகாதார நடைமுறைகள் தொடர்பாகச் சுகாதார பரிசோதகர்களால் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளது.


இதன்போது ஒவ்வொருவருக்கும் இடையில் சமூக இடைவெளிகள் இறுக்கமாகப் பேணப்பட வேண்டும் என்று உணவக உரிமையாளர்களிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், நிபந்தனைகளை மீறுபவர்களிற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.