வவுனியாவில் பொலிசார் என அடையாளம் காண்பித்து தங்க நகைகள் கொள்ளை!!

1736


தங்க நகைகள்..


வவுனியாவில் இருவேறு பகுதிகளில் தம்மை பொலிஸார் என அடையாளம் காண்பித்து சிலர் 30 பவுண் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்றைய தினம் (03.05)இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வவுனியாநகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை பொலிஸார் என கூறியுள்ளனர்.


பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு இரு வீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களைக் களவாடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.


இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.