இணையத்தளங்களில் பதிவிடப்படும் மருந்துகள் தொடர்பில் மக்களுக்கு அவசர எ.ச்சரிக்கை!!

376


இணையத்தளங்களில்..


இணையத்தளங்களை பயன்படுத்தும் இலங்கை மக்களுக்கு அவசர எ.ச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவிட் – 19 வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மற்றும் சுதேச மருந்து வகைகள் தொடர்பில் இணையத்தளங்களில் பல பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் குறித்த பதிவுகளை நம்பி அதில் குறிப்பிடப்படும் ஆயுர்வேத மற்றும் சுதேச மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுதல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான எ.ச்சரிக்கையினை சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு வழங்கியுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், உடல் நோய் எ.திர்ப்பு சக்திக்காக உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள வழிக்காட்டல்களுக்கு அமையவே தேசிய மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதனையே மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.