யாழ். கிரிக்கெட் போட்டியில் இளைஞர் கொலை தொடர்பில் இருவர் கைது!!

644

A1யாழ்ப்பாணத்தில் கல்லூரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் சம்பவத்தில் 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இது தொடர்பில் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனையோரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.