சிறந்த வீரர்களுக்கான விருதுகள் அறிவிப்பு!!

595

Sachinதலைமுறையின் சிறந்த வீரருக்கான விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தட்டிச் சென்றுள்ளார்.

பிரபல கிரிக்கெட் இணையதளம் சார்பில் 1993 முதல் 2013 வரையிலான 20 ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரருக்கான தெரிவு நடத்தப்பட்டது.

டிராவிட், லட்சுமண், வக்கார் யூனிஸ், இயன் சப்பல் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என 50 பிரபலங்கள் அடங்கிய நடுவர்கள் குழு சிறந்த வீரரை தெரிவு செய்தது.

தலைமுறையின் சிறந்த வீரர் என்ற விருதுக்கு இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தெரிவாகியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான அறிமுக டெஸ்டில் 187 ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் ஷிகர் தவான், கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக தேர்வானார்.

சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான விருது, அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜோன்சனுக்கு கிடைத்தது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பெங்களூரு ஒருநாள் போட்டியில், இரட்டை சதம் அடித்த, இந்திய வீரர் ரோகித் சர்மா, சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 12 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் வீழ்த்தி, இதே போட்டியில் 55 பந்துக்கு 76 ஓட்டங்கள் குவித்த, பாகிஸ்தானின் அப்ரிடி சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளருக்கான விருதை வென்றார்.

தலைமுறையின் சிறந்த வீரர்- சச்சின்
சிறந்த டெஸ்ட் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்- ஷிகர் தவான்
சிறந்த டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்- மிட்சல் ஜோன்சன்
சிறந்த ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்- ரோகித் சர்மா
சிறந்த ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்- அப்ரிடி