வவுனியாவில் சதொச ஊடாக அரசாங்கத்தின் நிவாரணப் பொதி வழங்கல்!!

2161

சதொச ஊடாக..

சதொச ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரசாங்கத்தின் நிவாரணப் பொதி வவுனியாவிலும் வழங்கப்பட்டு வருகின்றது.

கொவிட் 19 தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் சாதொச விற்பனை நிலையம் ஊடாக நிவாரணம் பொதி வழங்குவதற்கு வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதனடிப்படையில் நாடு பூராகவும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதி கடந்த முதலாம் திகதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் மக்களின் இடர்களைப் போக்கும் வகையில் வவுனியா சதொச விற்பனை நிலையத்திலும் ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதி வழங்கப்பட்டு வருகின்றது.

குறித்த நிவாரணப் பொதியில் சம்பா ஒரு கிலோ, நாடு ஒரு கிலோ, கோதுமை மாவு ஒரு கிலோ, பருப்பு ஒரு கிலோ, நெத்தலி 200 கிராம், சீனி உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.