கொடிகாமத்தில் ரயில் மோதி ஒருவர் பலி!!

562

Trainகொடிகாமம், பெரியநாவல் பிரதேசத்தில் தண்டவாளப் பாதையில் மோட்டார் வண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் மற்றும் பளைக்கு இடையிலான தண்டவாள புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயிலில் மோதுண்டே அந்நபர் உயிரிழந்துள்ளார்.

விபத்தின்போது படுகாயமடைந்த மோட்டார் வண்டி சாரதி சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பெரியநாவல் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான நபரே இவ்வாறு பலியாகியுள்ளார்.