இலங்கையில் சிகிச்சை நிலையங்களில் நிரம்பி வழியும் கொரோனா தொற்றாளர்கள் : 4000 பேர் வீடுகளில் தவிப்பு!!

907

கொரோனா..

வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்கள் கோவிட் தொற்றாளர்களால் நிரம்பி காணப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இடவசதி இல்லாமையினால் 4000க்கும் அதிகமான நோயாளிகளை நேற்று காலை வரை வீடுகளில் வைக்க சுகாதார பிரிவுகளுக்கு நேரிட்டுள்ளது.

இலங்கையில் கோவிட் பரவலின் நான்காவது அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில் நாளுக்கு நாள் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கமைய நேற்று காலை வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்காத நோயாளிகளின் எண்ணிக்கை 4762ஆக அதிகரகித்தள்ளது.

தினமும் 1500க்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றமையினால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டு வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது வரையில் நெருக்கடியான நிலைமை ஒன்று ஏற்பட்ள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-