ஜனாதிபதிக்கு அவசர கடிதம்…
நாட்டில் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களை விட மும்மடங்கு சமூகத்தில் தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேசமயம் எதிர்வரும் நாட்களில் மரணங்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டு மக்களின் நடமாட்டத்தை உடனடியாக கட்டுப்படுத்துங்கள் என சுகாதார அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.