டிப்ளோமா கற்கைநெறிகளுக்கான..

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2021 ஆம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ Level 5) கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்காக கீழ்வரும் பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1) கணனி டிப்ளேமா
2) ஆங்கில டிப்ளோமா
3) கணக்கியல் டிப்ளோமா
4) குடிசார் எந்திரவியல் டிப்ளமோ
தகைமைகள் : கணனி டிப்ளேமா (NVQ 5)
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ICT பாடத்தில் திறமைச்சித்தி (C) அல்லது சாதாரண சித்தி (S) உள்ளடங்கலாக 3 பாடங்களில் சித்தி அல்லது கணனி தொடர்பான பாடநெறியில் NVQ 3 / NVQ 4 சான்றிதழ் பெற்றிருத்தல். காலம் : 1 1/2 வருடங்கள் – முழுநேரம், ஊடக மொழி : ஆங்கிலம், வயதெல்லை : 17-29.
தகைமைகள் : ஆங்கில டிப்ளோமா(NVQ 5)
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 படங்களில் சித்தியுடன் General English யில் S தர சித்தி அல்லது NCE/NCPE/ACS என்பவற்றில் ஏதாவது ஒன்றில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். காலம் : 1 1/2 வருடங்கள் – முழுநேரம், ஊடக மொழி : ஆங்கிலம், வயதெல்லை :17-29.
தகைமைகள் : தேசிய கணக்கியல் டிப்ளேமா (NVQ 5 & NVQ 6 Combined)
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தகத் துறையில் 3 பாடங்களில் சித்தியுடன் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆங்கிலத்தில் சித்தி அல்லது NCAT – NVQ 4 சித்தியடைந்திருத்தல் வேண்டும். காலம் : 2 வருடங்கள் – முழுநேரம், ஊடக மொழி : ஆங்கிலம், வயதெல்லை :17-29.
தகைமைகள் : குடிசார் எந்திரவியல் டிப்ளமோ (Civil Engineering) (NVQ 5)
உரிய துறையில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. க.பொ.த சாதாரணதர பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் போதனா மொழி, கணிதம், விஞ்ஞானம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். மற்றும் உரிய துறையில் NVQ 4 சான்றிதழை பெற்றிருத்தல் வேண்டும். காலம் : 3 வருடங்கள் – பகுதிநேர, ஊடக மொழி : ஆங்கிலம், வயதெல்லை : 18+.

விண்ணப்ப படிவங்களை தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்
தொழில்நுட்பக்கல்லூரி
மன்னார் வீதி
நெளுக்குளம்
வவுனியா
024 2223664
024 2226720
024 2050177





