கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை!!

2120

கொரோனா..

கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் கோவிட் நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துச் செல்லும் நிலையில் அரசாங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அதிகாரிகள் இன்றைய தினம் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றதுடன், ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளேயும் பங்கேற்றிருந்தார்.

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கோவிட்தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட உள்ளது. பீ.சீ.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கவும் பரிசோதனை முடிவுகளை துரித கதியில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவிட் சிகிச்சை நிலையங்களுக்கு போதியளவு ஒட்சிசனை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.