போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்..

ரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ரமழான் விடுமுறை மற்றும் அடுத்த நாட்களில் வார இறுதி விடுமுறை என்பதால் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர், நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு முழு நாட்டையும் முடக்காமல் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் பிரதேசங்களை மாத்திரம் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கமைய இதுவரையில் (நேற்று மாலை வரை) 6 பொலிஸ் பிரிவுகளும் , 114 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.





