வவுனியா றொக்கற் விளையாட்டு கழகத்தின், கட்டிட புனரமைப்பிற்கு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் நிதியுதவி!!(படங்கள்)

306


வவுனியா கோவில் புதுக்குளம் றொக்கற் விளையாட்டு கழகத்தின் கட்டிட புனரமைப்பு நிதியுதவி மற்றும் 39 ஆவது ஆண்டு நிறைவு விழாவிற்கான விளம்பர பதாதைகளை புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் வழங்கி வைக்கபட்டது.

வவுனியாவில் சித்திரை புதுவருடத்துடன் (13.04.2013) நடைபெற இருக்கும் வவுனியா கோவில்புதுக்குளம் றொக்கற் விளையாட்டு கழகத்தின் 39 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டிய விளையாட்டு விழாவும் எமது வன்னி கலைஞர்களின் இன்னிசை இரவுக்குமான விளம்பர பதாதைகள் இன்று புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் இல்லத்தில் வைத்து கழக முக்கியஸ்தர்களிடம் கையளிக்கபட்டது.



வவுனியா கோவில்புதுக்குளம் றொக்கற் விளையாட்டு கழகத்தின் கட்டிட புனரமைப்புக்கென கோவில்குளம் இளைஞர் கழகத்தின் பின்லாந்து கிளையினரால் வழங்கபட்ட ஒருதொகை பணம் இன்று வழங்கபட்டது. இதனை புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்) மற்றும் புளொட் முக்கியஸ்தரும் பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் நகரபிதாவுமான திரு ஜெ.வின்சன் கெனடி அவர்களும் இணைந்து வவுனியா கோவில்புதுக்குளம் றொக்கற் விளையாட்டு கழகத்தின் உபதலைவர் திரு ஆர்.சுரேஷ்குமார், பொருளாளர் ஜெ.மோகன் ஆகியோரிடம் வழங்கி வைத்தனர்.

இவ் நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) , புளொட் முக்கியஸ்தரும் பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் நகரபிதாவுமான திரு ஜெ.வின்சன் கெனடி, றொக்கற் விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.தவச்செல்வன் றொக்கற் விளையாட்டு கழகத்தின் உபதலைவர் ஆர்.சுரேஷ்குமார் றொக்கற் விளையாட்டு கழகத்தின் பொருளாளர் ஜெ.மோகன் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் விளையாட்டுத்துறை அமைப்பாளர் றொபெட் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் இணைப்பாளர் காண்டீபன் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் தொழில்நுட்ப பிரிவின் சதீஸ், நிகேதன் மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் கல்வி அபிவிருத்தி குழுவின் இயக்குனர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.



22 23