பயணக் கட்டுப்பாடு..

தேவை ஏற்பட்டால் மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், அது நிராகரிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் மே 30 வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா முன்னர் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளின் செயற்பாடுகளை பாதிக்காது என்று அவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் அச்சம் காரணமாகவே இவ்வாறான நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-தமிழ்வின்-





