சிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய 55 வயது நபருக்கு விளக்கமறியல்!!

1233

jailகண்டி நகரப் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி பயிலும் சிறுவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 55 வயதுடைய நபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டி போகம்பறை விளையாட்டு மைதான மலசல கூடத்திற்குள் வைத்து குறித்த சிறுவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கண்டி போகம்பறை மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது மாலைவேளை போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்த நபர், சிறுவன் மலசலகூடத்திற்கு செல்வதை அவதானித்து மெதுவாக உட்புகுந்து சிறுவன் மீது குற்றம் புரிந்துள்ளார்.

இதனை அறிந்த பொலிஸார் அந்நபரை வளைத்துப் பிடித்து நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் சந்தேக நபருக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.