
புதிதாக திறக்கப்பட்ட காலி – மாத்தறை அதிவேக வீதியின் பஸ் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேர அட்டவணையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக வீதியின் காலி – மாத்தறை தொகுதி நேற்று முன்தினம் 15ம் திகதி திறக்கப்பட்டது. நேற்று பகல் பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேர அட்டவணை பிரச்சினை தீர்க்கப்பட்டு மீண்டும் பஸ் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.




