வவுனியாவில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்த நிலையில் வீடுகளிலேயே நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்!!

977

நோன்புப் பெருநாள்..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியாவில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்த நிலையில் முஸ்லிம் மக்கள் தமது வீடுகளில் அமைதியான முறையில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் முஸ்லிம் மக்கள் தமது வீட்டு வளாகத்திலும்,

வீட்டு மொட்டை மாடிகளிலும் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டதுடன், அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நோன்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.