வவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வர்த்தக சங்கத்தினரினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்!!

1316

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்..

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி வழங்கப்பட்டது.

200 கட்டில்களுடனுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் 155 கொரோனா நோயாளர் தற்போது குறித்த சிகிச்சை பெற்று வருகின்றர்.

இந் நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் வர்த்தக சங்கத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து லண்டன் சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தின் நிதி பங்களிப்புடன் வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் ஒரு நாளைக்கு 600 லீட்டர் வரையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கும் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், வன்னி இராணுவ கட்டளைத்தளபதி , வர்த்தக சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.