சங்கக்காரவை தொடர்ந்து மஹேல ஜயவர்த்தனவும் ஓய்வு பெறுகிறார்!!

446

Mahela

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்த்தனவும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார நேற்று அறிவித்த நிலையில், மஹேல ஜயவர்த்தனவின் ஓய்வு செய்தி இன்று வெளிவந்துள்ளது.

அதன்படி இவ்விருவரும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறவுள்ளனர்.

36 வயதான மஹேல ஜயவர்த்தன 49 இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1335 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அதில் ஒரு சதமும் 8 அரைச்சதங்களும் அடங்கும்.

இளைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மூத்த வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்து வருகின்றனர். இவர்கள் இருவரது ஓய்வு இலங்கை கிரிக்கெட்டிற்கு பாரிய இழப்பாகும்.