யாழில் பேருந்து மீது தாக்குதல் : பயணிகள் இருவர் காயம்!!

1459

Busயாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேருந்து மீது இன்று அதிகாலை 5.30 மணியளவில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பேருந்து நிலையத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு செல்வதற்கு அரச பேருந்து ஒன்று தயாராகியிருந்த வேளையில், அங்கு சென்ற குழு ஒன்று பேருந்தில் துண்டுப்பிரசுரம் ஒட்டுவதற்கு முற்பட்டிருக்கின்றது. இதற்கு பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோரால் அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் பேருந்து பயணத்தினை ஆரம்பித்து மடத்தடி என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, வாகனங்களில் சென்ற ஒரு குழுவினர் பேருந்தை மறித்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

சம்பவத்தில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளதுடன், பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றாகச் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவத்தினை அடுத்து பயணத்தினை இடைநிறுத்திய பேருந்து சாரதியால் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்படுவதாக பேருந்தில் பயணித்த ஒருவர் தெரிவித்தார்.