கொரோனா விளையாட்டல்ல.. இறப்பதற்கு முன் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் கலங்க வைக்கும் வீடியோ!!

875

இந்தியாவில்..

இந்தியாவில் நிறைமாத கர்ப்பிணி தாயார் ஒருவர் தாம் இறப்பதற்கு முன்பு கொரோனா தொற்றை தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள் என கெஞ்சிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநில நிர்வாகமும் தங்கள் மக்களை காக்க கடுமையாக போ.ராடி வருகிறது.

பல மாநில நிர்வாகங்கள் தரவுகளை மறைத்தும், மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை செய்து தராமலும் அலைக்கழித்தும் வருகிறது. இதனால் பொதுமக்களே தங்கள் உயிரை தாங்களே காப்பாற்றிக்கொள்ளும் இக்கட்டான சூழலில் உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றும் கோரம் தொடர்பில் பல் மருத்துவர் ஒருவரின் வீடியோ ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. புது டெல்லியை சேர்ந்த 34 வயது பல் மருத்துவர் டிம்பில் அரோரா சாவ்லா என்பவர் கொரோனாவால் ஏப்ரல் 26ம் திகதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவர் இறப்பதற்கு முந்தைய நாள் 7 மாத கர்ப்பிணியான அவர் தமது குழந்தையை இழந்தார். இந்த நிலையில் மருத்துவர் சாவ்லாவின் கணவர் வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.

மருத்துவர் சாவ்லா இறப்பதற்கும் 9 நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட காணொளி அது. அதில் அவர், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை துணிந்து துரிதமாக முன்னெடுக்க இந்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி, யாரும் கொரோனா தொற்றை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூச்சுவிட முடியாமலும், தொடர் இருமலால் அவதிப்பட்டும், கடுமையான தலைவலியால் தூங்க முடியாமல் போனதையும் மருத்துவர் சாவ்லா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். உங்களுக்காகவும், உங்கள் உறவினர்களுக்காகவும் நீங்கள் பத்திரமாக இருப்பது முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வீடியோ பதிவு செய்த 9 நாட்களுக்கு பின்னர் மருத்துவர் சாவ்லா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மட்டுமின்றி அவரது 7 மாத குழந்தையையும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.