வவுனியாவில் இருந்து வெளி மாகாணங்களுக்கு மரக்கறிகளை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை!!

1967

வவுனியாவில் இருந்து வெளி மாகாணங்கள் மற்றும் வேறு மாவட்டங்களுக்கு மரக்கறிகளை கொண்டு சென்று சந்தைப்படுத்துவதற்கு அனுமதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் நே.விஸ்ணுதாசன் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் போக்குவரத்து தொடர்பில் அரசாங்கத்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,

வவுனியாவில் மரக்கறிகள், பழங்கள், விவசாய உற்பத்திகளை மேற்கொள்வோர் அதனை வெளி மாகாணங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் சந்தைப் படுத்துவதற்கு விவசாயிகளின் அத்தியாவசிய தேவை கருத்தி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெளி மாகாணங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு மரக்கறிகள், பழங்கள், விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்த கொண்டு செல்லும் விவசாயிகள் தங்கள் பிரிவு கிராம அலுவலரின் உறுதிப்படுத்தலுடன்,

மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு வருகை தந்து அனுமதிப் பெற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.