டெல்லி பாணியில் அரங்கேற முயன்ற பலாத்கார சம்பவம்!!

339

Abuseகற்பழிப்பு முயற்சி தோற்றதால் பேருந்திலிருந்து பெண்ணை கீழே தள்ளிய ஓட்டுநரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் பெங்களூரு நகரின் பனஷங்கரி பகுதிக்கு கடந்த 13ம் திகதி இரவு அரசு பேருந்தில் சென்றுள்ளார்.

கடைசி நிறுத்தமான பனஷங்கரியில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், ஓட்டுநரிடம் சென்ற அந்த பெண், தேவேகவுடா பெட்ரோல் பங்குக்கு எந்த வழியாக போக வேண்டும் என்று விசாரித்துள்ளார்.

பேருந்து அந்த பக்கமாகதான் போகிறது. உங்களை அங்கே இறக்கி விடுகிறேன் என்று கூறிய ஓட்டுநர் சற்று தூரம் சென்றதும் பேருந்தை நிறுத்திவிட்டு அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

திகைத்துப் போன அந்த பெண் பயத்தில் கூச்சலிடவே மீண்டும் பேருந்தை கிளப்பி சாம்ராஜ்பேட் பகுதி வழியாக சென்ற அவர் கைப்பையை பறித்துக் கொண்டு அந்த பெண்ணை பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக சென்று விட்டார்.

கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அந்த பெண் நடந்த சம்பவம் தொடர்பாக சாம்ராஜ்பேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் சித்தார்த் என்பவரை பொலிசார் கைது செய்தனர். அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்ட கர்நாடக மாநில போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, காயமடைந்த பெண்ணின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்காத 3 பொலிசாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.