கொரோனா தொற்றால் 8 மாத கர்ப்பிணித் தாய் மரணம்!!

1140

கர்ப்பிணித் தாய்..

திஸ்ஸமஹாராம யாயகொட பிரதேசத்தில் வசித்து வந்த கர்ப்பிணி தாய் ஒருவர் கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். 35 வயதான கர்ப்பிணி தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் இறக்கும் போது அவர் 8 மாத கர்ப்பிணி என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி மகரகமவில் நடைபெற்ற உறவினர் ஒருவர் நடத்திய விருந்தில் இந்த கர்ப்பணி பெண் உட்பட குடும்பத்தை சேர்ந்த 12 பேர் கலந்துக்கொண்டுள்ளனர். இதன் பின்னர் விருந்தில் கலந்துக்கொண்ட மகரகமவை சேர்ந்த 17 பேருக்கு கோவட் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 5 ஆம் திகதி குறித்த கர்ப்பிணி பெண்ணுக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதுடன் அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த இந்த கர்ப்பிணி பெண் துரதிஷ்டவசமாக, வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையுடன் உயிரிழந்துள்ளார்.