இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் பலி!!

919


அருண்ராஜா காமராஜ்…


பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் மையப்படுத்தி வெளியான இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.இப்படத்தின் இயக்குநர் அருண்ராஜா ராஜா ராணி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அத்துதான் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் நெருப்புடா பாடலையும் எழுதி பாடியுள்ளார்.


தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஆர்ட்டிகிள் 15 என்ற பாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். இந்நிலையில் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.


இதையடுத்து அவர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு உ.யிரிழந்துள்ளார். சிந்துஜாவின் மறைவு செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.