இலங்கையில் முழுவதும் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள்!!

1694

பயணக் கட்டுப்பாடுகள்…

இலங்கையில் நாடாளவிய ரீதியில் இரண்டு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரையும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 மணி முதல் மே 28 வௌ்ளி அதிகாலை 4 மணி வரை மற்றுமொரு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

எனினும் பயணத் தடை விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் போக்குவரத்திற்கு எவ்வித தடையும் இல்லை என இராணுவத் தளபதி குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.