ஆத்மசாந்தி பிரார்த்தனை..

வவுனியாவில் முள்ளிவாய்காலில் மரணித்த மக்களின் நினைவாக ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது. வவுனியா, குட்செட் கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் ஆலய பிரதம குரு பிரபாகரக்குருக்கள் தலைமையில் விசேட ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் இன்று (18.05) காலை இடம்பெற்றன.

தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் கோவில் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

இவ் வழிபாடுகளில் சமூக ஆர்வலர்கள், உறவுகளை இழந்தவர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி ஆத்ம சாந்தி வேண்டிப் பிரார்த்தித்தனர்.

இதேவேளை, பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றபோது ஆலயத்தின் வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தவர்களின் அடையாள அட்டையை பரிசோதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






