இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது : ஒரே நாளில் 34 பேர் பலி!!

1006

கொரோனா…

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இறுதியாக மேலும் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் இதுவரை இலங்கையில் 1015 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றையதினம் 34 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இதுவே இலங்கையில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொவிட் மரண எண்ணிக்கையாகும்.

இதேவேளை, நேற்றையதினம் 2,478 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 147,680 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.