விபத்து..

வவுனியா தாண்டிக்குளம் – புதுக்குளம் பிரதான வீதியில் பிக்கப் வாகனமொன்று மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் இன்று (19.05.2021) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புதுக்குளம் ஊடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனம் சாஸ்திரிகூழாங்குளம் நாற்சந்தியடியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் வாகனத்தின் ஓர் பகுதி சேதடைந்துள்ளது.

விபத்துச்சம்பவம் தொடர்பில் அவ்விடத்திலிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்ட சமயத்தில் சில மக்கள் மாட்டுடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதாகவும் மற்றும் சில மக்கள் மோட்டார் சைக்கிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் செருப்பு , தொப்பி , மோட்டார் சைக்கிலின் சிறிய பகுதிகள் என்பன வீதியில் காணப்பட்ட சமயத்தில் அதனை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த சமயத்தில் அப்பகுதி இளைஞர் ஒருவர் அவற்றை எடுத்து பற்றைக்குள் வீசியதுடன் மாட்டுடன் மோதுண்டு தான் இவ்விபத்து இடம்பெற்றது என ஊடகவியலாளரை அச்சுறுத்தும் தொனியிலும் தெரிவித்தார்.

மர்மமான இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரை தொடர்பு கொண்டு வினவிய போதிலும் விபத்து தொடர்பான எவ்வித தகவல்களும் தமக்கு இது வரையில் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கின்றனர்.





