வவுனியா, ஓமந்தை -கள்ளிக்குளம் முன்பள்ளியில் சிறார்களுக்கு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!(படங்கள்)

349

ஓமந்தை கள்ளிக்குளம் முன்பள்ளியில் கல்விகற்கும் சிறார்களுக்கு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.

வவுனியா ஓமந்தை கள்ளிக்குளம் பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் ஊடாக அமெரிக்கா கலிபோனியாவை வதிவிடமாக கொண்ட அம்பாறை கண்ணகிபுரத்தை சேர்ந்த நல்லதம்பி சத்தியகுமார் அவர்களின் சகோதரனின் நினைவுதினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் நேற்று (17.03) வழங்கபட்டது.

இதனை புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திருக.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் வழங்கிவைத்தார். ஓமந்தை கள்ளிக்குளம் முன்பள்ளியில் கல்விகற்கும் சிறார்களின் கல்வியை மேலும் வளப்படுத்தும் நோக்கில் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கபட்டது.

நிகழ்வில் உரையாற்றிய திருக.சந்திரகுலசிங்கம்(மோகன்) , இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்றும் அவர்கள் தான் எதிர்காலத்தில் எமது சமூகத்தை சிறந்த முறையில் வழி நடத்தி செல்வார்கள் என்றும் தெரிவித்தார். சிறார்கள் கிடைக்கும் வளங்களை உச்சவினைத் திறனுடன் பயன்படுத்துமாறும் கேட்டுகொண்டார்.

அமெரிக்கா கலிபோனியாவை வதிவிடமாக கொண்ட அம்பாறை கண்ணகிபுரத்தை சேர்ந்த நல்லதம்பி சத்தியகுமார் அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் புலம் பெயர்ந்த தமிழர்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவ முழுமனதுடன் முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எம்.ராமதாசன், மீள்குடியேறி அடிப்படை வசதிகள் இன்றியும் கற்றல் உபகரணங்கள் வாங்க முடியாமல் கஷ்டபடும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்த திருக.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆசிரியர் ர.பிரியதர்சினி , மேலும் பல அத்தியாவசிய உதவிகளை தமது சிறார்களுக்கு செய்ய வேண்டும் எனவும் புலம் பெயர்ந்த உறவுகள் கிராம மட்டத்தில் வசிக்கும் மாணவர்களின் கல்வி வளர்சிக்கு உதவ முன்வரவேண்டும் என்றும் திருக.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆசிரியர் ச.மேசி கனிஷ்டா, இதுவரையும் எமது சிறார்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்றும் கற்றல் உபகரணங்களை தந்தமைக்கும் நன்றியை தெரிவித்தார். இவ் நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எம்.ராமதாசன், கள்ளிக்குளம் மாதர் சங்க தலைவியும் தொண்டர் ஆசிரியருமான திருமதி .ந.ரத்னமாலா, ஆசிரியர்களான ச.மேசி கனிஷ்டா, ர. பிரியதர்சினி,கோவில்குளம் இளைஞர் கழகத்தின் தொழில்நுட்ப பிரிவின் சதீஸ்,அகிலன், சுரேஷ்குமார் மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் கல்வி அபிவிருத்தி குழுவின் இயக்குனர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 2 3