நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

1600

முக்கிய அறிவிப்பு…

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகளை அடுத்த சில நாட்களுக்கு வீடுகளில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் என நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் ஒருவாரகால பயணவரம்பு விதிக்கப்படும். எனவே வீடுகளில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில் தேவையின்றி வீதிகளில் இருந்து யாரும் பயணிக்க கூடாது. வெளியில் இருந்து வருபவர்களை வீடுகளில் வைத்துக் கொள்ளக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

இப் பயணக் கட்டுப்பாடானது கோவிட் தொற்றுப் பரவுவதை தடுப்பதற்கு உதவும் என சுகாதார துறையினர் வலியுறுத்தியிருப்பதாகவும் இதனடிப்படையில் ஐனாதிபதியின் பரிந்துறையின் பேரில் இப் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.