கொரோனாவால் மரணமடைந்தவரின் உடல்..

மன்னாரில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த 64 வயது நபரின் உடல் வவுனியா, பூந்தோட்டத்தில் இன்று மதியம் (20.05.2021) தகனம் செய்யப்பட்டது.

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று (19.05) மன்னாரில் மரணமடைந்தார்.

அவரது உடல் மன்னார் சுகாதாரப் பிரிவினரால் எடுத்து வரப்பட்டு வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள நகரசபையின் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது மரணித்தவரின் உறவினர்கள் சிலரும் தகனம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






