விபத்து..
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று (21.05.2021) மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியா நகரில் இருந்து யாழ் வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், அதே வீதியில் வந்த முச்சக்கர வண்டியும் மாவட்ட செயலகம் முன்னால் முந்திச் செல்ல முற்பட்ட போது மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.